SRI LANKA CHRISTIAN CONGRESS PARTY
SRI LANKA CHRISTIAN CONGRESS PARTY
செய்திகள்
கிறிஸ்தவ மக்களின்பிரச்சனைகளை வெளிக் கொண்டு வந்து அதற்கான தீர்வினைப் பெறும் முகமாக இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ் கட்சி உதயமாகியுள்ளதாக அக் கட்சியின் பொதுச் செயலாளர் என்.விஸ்ணுகாந்தன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் சனிக்கிழமை மாலை (22) ஹொரவப்பொத்தானை வீதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று கிறிஸ்தவ மக்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றனர். அவர்களது பிரச்சனை தொடர்பில் கிறிஸ்தவ சமய மக்கள் பிரதிநிதிகள் கூட கவனம் செலுத்துவதில்லை. சுதந்திரமாக மதப் போதனைகளை செய்ய முடியவில்லை.
இலங்கையின் 25 மாவட்டங்களிலும் கிறிஸ்தவர்கள் வாழ்கின்றனர். தமிழ் மொழி பேசும் கிறிஸ்தவர்கள், சிங்கள மொழி பேசும் கிறிஸ்தவர்கள் என இரு பகுதியினர் உள்ளனர். அவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து இக் கட்சி உதயமாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இச் சந்திப்பில் கட்சியின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.