SRI LANKA CHRISTIAN CONGRESS PARTY
SRI LANKA CHRISTIAN CONGRESS PARTY
News
இலங்கை அரசியலில் முதல் முறையாக கிறிஸ்தவர்களை அரசியலில் பிரதிநிதித்துவப்படுத்தும் நோக்கத்துடன் இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ் கட்சியானது அரம்பிக்கப்பட்டுள்ளது .
கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள் அரசியலில் மிக முக்கிய பதவிகளை வகித்தும் கிறிஸ்தவ மக்களுக்கு ஏற்ப்படுகின்ற இன்னல்களின்போதும், மற்றும் எனைய பிரச்சனைகளின்போதும் எவரும் பேச முன் வருவதில்லை ,
தேசிய அரசியல் என்று கூறிக்கொண்டு கிறிஸ்தவ கோட்பாட்டை மீறி
கிறிஸ்தவர்களை மதவாதி என்று , சமுகத்தை விட்டு ஒதுக்கும் நிலைக்கு கிறிஸ்தவர்களை தள்ளுகின்றனர் .
தேர்தல் காலங்களில் மாத்திரம் கிறிஸ்தவ ஆலயங்களையும் ,சபைகளையும் மற்றும் கிறிஸ்தவ தலைவர்களையும் ,மக்களையும் நேரில் கண்டு உங்களுக்காக நங்கள் இருக்கின்றோம் ,
உங்கள் ஆதரவினை எங்களுக்கு தாருங்கள் உங்கள் வாக்குகளை எங்களுக்கு அளியுங்கள் என்று
கிறிஸ்தவ மக்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டு ,வெற்றி வாகை சூடி , உரிய ஆசனங்களில் அமர்ந்ததும் ,வாக்களித்த கிறிஸ்தவ மக்களை மறந்து தங்கள் காரியத்தை மாத்திரம் பார்க்கிரவர்கலாகவே காணப்படுகின்றனர் .
வாக்களித்த கிறிஸ்தவ மக்களின் நிலை என்ன?
ஆலயங்களை துன்பப்படுத்துவது , சபைகளை உடைத்தல் ,சபைகளுக்கு தீ வைப்பது , கிறிஸ்தவ மக்களுக்கு அச்சுறுத்தல் கொடுப்பது , கிறிஸ்துவின் பணியாளர்களை தாக்குவது இப்படி இலங்கை முழுவதும் உள்ள கிறிஸ்தவ மக்கள் பல இன்னல்களில் வாழ்கின்றனர், எனவே இதன் காரணமாகவே இலங்கை முழுவதும் தனித்துவம் உள்ள
கிறிஸ்தவ அரசியல் பிரதிநிதிகளை ஏற்படுத்தும் முகமாக இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ் கட்சி அரம்ப்பிக்கப்படுள்ளது ,
சிங்கள மொழி ,தமிழ் மொழி பேசுகின்ற கிறிஸ்தவர்கள் , அனைவரும்
இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ் கட்சியோடு ஒன்று திரளுமாறு ,
கேட்டு கொல்கிறோம் ,
...நன்றி ...
பொதுச் செயலாளர் .நா .விஷ்ணுகாந்தன்
இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ் கட்சி
யாழ்ப்பான வீதி, வவுனியா , இலங்கை
|